உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் பிப்ரவரி 28ஆம் தேதி ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, அங்குள்ள கிராம மக்கள் மூன்று பேரை கடித்தது.
இந்நிலையில், இன்று காலை அதே பகுதியில் மீண்டும் புகுந்த சிறுத்தை, கிராம மக்கள் ஆறு பேரை பயங்கரமாகத் தாக்கியது. இதில் படுகாயமடைந்த மக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதனிடையே, கிராம மக்கள் தாக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சிறுத்தையை கம்புகள் போன்ற ஆயுதங்கள் கொண்டு பலமாகத் தாக்கினர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், சிறுத்தையை பிடித்தனர். இருப்பினும் கிராம மக்களின் மிருகவதைக்குள்ளான அச்சிறுத்தை வனத்துறையினர் கைப்பற்றிய சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது.
இதையடுத்து, சிறுத்தையை உடற்கூறாய்வுக்கு அனுப்பிய வனத்துறையினர், சிறுத்தை தாக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளனர்.