தற்போது அரசு அறிவித்துள்ள திட்டங்களால் சாதாரண மக்கள் எவ்விதத்திலும் பயனடைய மாட்டார்கள் என்றும், பெரும் வணிக நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்ட முடியும் என்றும் சீத்தாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 விழுக்காடு மட்டுமே சுகாதாரச் சேவைகளுக்காக செலவிடப்படுகிறது. மற்ற நாடுகள் உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து முதல் பத்து விழுக்காடு வரை சுகாதாரச் சேவைக்காகச் செலவிடுகின்றன. அதேபோல், இந்தியா சுகாதார ச்சேவையில் மூன்று விழுக்காடை செலவிடவேண்டும்.
பத்து லட்சம் பேருக்கு 1,200 பேர் என்ற அளவில் மட்டுமே தற்போது இந்தியாவில் சோதனை நடைபெற்றுவருகிறது. அதேபோல், 1,000 பேருக்கு 0.8 மருத்துவர்கள் என்ற விகிதத்தில்தான் மருத்துவர்கள் உள்ளனர். மருத்துவமனைகளில் 0.7 விழுக்காடு படுக்கைகள் மட்டுமே உள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க பொதுச் சுகாதாரத் துறையில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.
அரசாங்கத்தின் கிடங்கில் எட்டு கோடி டன்களுக்கும் அதிகமான உணவு தானியங்கள் இருப்பு உள்ளன. அதன்படி பார்த்தால் கூட நபர் ஒருவருக்கு மாதம் பத்து கிலோ அரசி இலவசமாக வழங்கலாம். மோடி அரசு மக்களுக்கு நிவாரணமாக என்ன கொடுக்கிறது, எவ்வளவு கூடுதல் பணம் கொடுக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'முன் களப்பணியாளர்களை கரோனாவிலிருந்து காக்க வேண்டும்' - யோகி ஆதித்யநாத்