ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் அருகேயுள்ள காசிபுகா விவசாயத் தோட்டத்தில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம் ஒன்று கிடந்தது. இதைக் கண்ட அப்பகுதியினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காசிபுக்கா காவல் உதவி ஆய்வாளர் சிரிஷா, அடையாளம் தெரியாத அந்த முதியவரின் சடலத்தை தோளில் சுமந்து சென்று லலிதா அறக்கட்டளையில் ஒப்படைத்தார். இதையடுத்து, சிரிஷாவின் செயலைக் கண்டு காவல் துறை உயர் அலுவலர்கள் பாராட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா தாக்கம்... மானியம் வழங்கியதற்கான செலவு 160 விழுக்காடு உயர்வு!