உத்தரப் பிரதேசத்தில் 2017ஆம் ஆண்டில், உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை, அம்மாநில முன்னாள் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் பாலியல் வல்லுறவு செய்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அச்சிறுமி சென்ற கார் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தை குல்தீப் சிங் திட்டமிட்டு செய்ததாகப் பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டினர். இதனால் பாஜக தலைமை அவரை பதவிநீக்கம் செய்தது. அதையடுத்து இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே, சிறையிலிருக்கும் குல்தீப் சிங்கின் சகோதரர் மனோஜ் சிங் உயிரிழந்தார். அவரின் இறுதிச் சடங்குக்கு செல்ல குல்தீப் சிங் சார்பில் பரோல் வழங்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், குல்தீப் சிங்குக்கு மூன்று நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், லக்னோ சிறையிலிருக்கும் குல்தீப் சிங் உன்னாவில் நடக்கும் இறுதிச் சடங்கில் பங்கேற்கவுள்ளார்.
இதையும் படிங்க: 'சுஜித்தை உயிருடன் மீட்கும் பணிகள் தீவிரம்' - பிரதமர் நரேந்திர மோடி