கடந்தாண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்று, தற்போது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் பரவிவருகிறது. இந்நிலையில், சமீபத்தில் கர்நாடகாவிலிருந்து தெலங்கானா வந்த ஒருவருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அந்த நபர் சமீபத்தில்தான் துபாய் சென்று வந்திருந்தார்.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து கர்நாடாகவுக்கு வரும் அனைவரும், கண்டிப்பாக இரண்டு வாரங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் டெல்லி செல்ல அனுமதி!