நாட்டின் நான்காவது மிகப் பெரிய நதியாகக் கருதப்படும் கிருஷ்ணா நதியின் கால்வாய்களைத் தூய்மைபடுத்த ஆந்திர அரசு 'மானா கிருஷ்ணா' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டம் 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'மானா விஜயவாடா' என்ற திட்டத்தின் நீட்சியாக இருக்கும்.
ரூ. 400 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நதியின் காவ்லாய்களிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை நீக்க முடியும் என்று கிருஷ்ணா மாவட்ட ஆட்சித் தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற மக்கள் பங்கேற்பு மிக முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன், கிருஷ்ணா நதியை பிளாஸ்டிக் இல்லாத நதியாக மாற்ற ஆந்திர அரசு முன்னெடுத்த 'நீனு சைதம் கிருஷ்ணம்மா சுவி செவலோ' திட்டமும், விஜயவாடா நகரை தூய்மைபடுத்த தொடங்கப்பட்ட 'மன விஜயவாடா' திட்டமும் பெறும் வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் எதிரொலி: சீனாவிற்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியா!