கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று ஒருநாள் மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்விடுத்தார்.
பிரதமரின் இந்த வேண்டுகேளை ஏற்று பொதுமக்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கைக் கடைப்பிடித்தனர். அத்தியாவசிய சேவைகள் தவிர வேறெந்த சேவைகளும் இயங்கவில்லை.
இந்நிலையில், இந்த மக்கள் ஊரடங்கால் கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் காற்றின் தரம் உயர்ந்துள்ளது. சாதாரண நாள்களில் கொல்கத்தாவில் காற்று தர மதிப்பீடு 150-க்கும் மேல் இருக்கும். ஆனால் இந்த ஊரடங்கால் பல்வேறு இடங்களில் காற்றின் தரம் 70-க்கு கீழ் இருந்தது.
இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'சுகாதார ஊழியர்களின் வீரம் நிறைந்த முயற்சிகளுக்கு சல்யூட்' - கேரள முதலமைச்சர்