ETV Bharat / bharat

நோ 'கிஸ்' நோ 'ஹக்' நோ 'டச்'- மெட்ரோவில் விழிப்புணர்வு சுவரொட்டி!

author img

By

Published : Mar 7, 2020, 11:18 AM IST

கொல்கத்தா: மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒட்டப்பட்டுள்ள கொரோனா வைரஸ் விழிப்புணர்வு சுவரொட்டி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விழிப்புணர்வு சுவரொட்டி
விழிப்புணர்வு சுவரொட்டி

நடிகர் ரஜினிகாந்தின் 'பெயர கேட்டா சும்மா அதுருதுல' என்ற வசனம் போல், 'கொரோனா' என்ற பெயரை கேட்டாலே எல்லாரும் தெறித்து ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெளிநாட்டில், ஒரு பெண் விளையாட்டாக தனது கணவரிடம் கொரோனா இருக்கலாம் எனக் கூறிய அடுத்த நொடியே, மொத்த குடும்பமும் சேர்ந்து அவரை குளியறையில் பூட்டியது போன்ற பல்வேறு அதிர்ச்சியான சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.

பொதுமக்களிடையே அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையங்களில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. விழிப்புணர்வு சுவரொட்டியில், மக்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்ற பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. செய்யக்கூடாத பட்டியலில் கிஸ், ஹக், டச், கை குலுக்குதல் ஆகியவை இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Coronavirus
கொல்கத்தா மெட்ரோவில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு சுவரொட்டி.

பொது வெளியில் பார்ப்பவர்களிடம் கை குலுக்குதல் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வந்த நிலையில், கொல்கத்தா மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு படி மேலே போய், 'நோ ஹக், நோ கிஸ், நோ டச்' என்று கூறியிருப்பது அனைவர் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 3,000 எட்டிய பலி எண்ணிக்கை, சீனாவில் தொடரும் கொரோனா சோகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.