இந்திய அரசின் தலைமை வழக்குரைஞராக (அட்டர்னி ஜெனரல்) பதவி வகித்துவரும் கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் இன்றுடன் (ஜூன்30) நிறைவடைகிறது.
இந்நிலையில் அவருக்கு கூடுதலாக ஓராண்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் துணை தலைமை வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) துஷார் மேத்தாவின் பதவிக் காலமும் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் துணை தலைமை வழக்குரைஞராக ( Additional Solicitor General -ASG) மூத்த வழக்குரைஞர் சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு தற்போதுள்ள, ஐந்து கூடுதல் துணை தலைமை வழக்குரைஞர்களின் (ஏ.எஸ்.ஜி) பதவியை மேலும், மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில் கூடுதலாக மூன்று ஆண்டுகள் பதவி நீட்டிப்பு பெற்றுள்ள அரசு கூடுதல் துணை தலைமை வழக்குரைஞர்கள் விவரம் வருமாறு:-
வ.எண் | பெயர் | உயர் நீதிமன்றம் |
01 | யெஸ்டெஸார்ட் ஜெஹாங்கிர் தஸ்தோர்ட் | கல்கத்தா |
02 | சேத்தன் சர்மா | டெல்லி |
03 | ஆர். சங்கர நாராயணன் | மெட்ராஸ் (சென்னை) |
04 | கிருஷ்ண நந்தன் சிங் | பாட்னா |
05 | தேவாங் கிரிஷ் வியாஸ் | குஜராத் |
இதையும் படிங்க: வழக்கமான ரயில் சேவை எப்போது? - ரயில்வே துறை பதில்