ETV Bharat / bharat

கிரண் பேடி ராஜினாமா செய்ய வேண்டும் - புதுச்சேரி முதலமைச்சர் - கிரண் பேடி ராஜினாமா செய்ய வேண்டும்

புதுச்சேரி: துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அனுப்பும் கோப்புகளை மத்திய அரசு நிராகரிப்பதால் அதற்கு தார்மீக பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர்
புதுச்சேரி முதலமைச்சர்
author img

By

Published : Dec 16, 2019, 4:40 PM IST

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அம்மாநில சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பொருளாதார மந்தநிலையால் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய வரி குறைந்துள்ளது. புதுச்சேரியைப் பொறுத்தவரையில் வாகனங்கள் விற்பனை குறைந்துள்ள காரணத்தால் வருவாய் குறைந்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தியதற்காக மத்திய அரசு, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வழங்க வேண்டிய 14 விழுக்காடு இழப்பீட்டுத் தொகையான சுமார் ரூ.380 கோடி இன்னும் வழங்கப்படவில்லை.

வரியை நம்பியுள்ள புதுச்சேரிக்கு, மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிதி கொடுக்காததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் இப்பிரச்சனையை எழுப்பி நிதி அமைச்சரின் ஒத்துழைப்பைக் கேட்கவுள்ளோம்.

செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, பல்வேறு கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். ஆனால், கிரண்பேடியின் உத்தரவை மத்திய அரசு ஏற்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆளுநர் அல்லது துணைநிலை ஆளுநர் தனது முடிவை மத்திய அரசு ஏற்காவிட்டால் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

Intro:புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அனுப்பும் கோப்புகளை மத்திய அரசு நிராகரிக்கின்றது. மத்திய அரசு துணை நிலை ஆளுநரை மதிக்கவில்லை என்று தெரிகின்றது. இதனால் துணை நிலை ஆளுநர் தனது முடிவை மத்திய அரசு ஏற்காவிட்டால் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Body:புதுச்சேரி 16-12-19
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அனுப்பும் கோப்புகளை மத்திய அரசு நிராகரிக்கின்றது. மத்திய அரசு துணை நிலை ஆளுநரை மதிக்கவில்லை என்று தெரிகின்றது. இதனால் துணை நிலை ஆளுநர் தனது முடிவை மத்திய அரசு ஏற்காவிட்டால் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சட்டப்பேரவை வளாகத்தில் சந்தித்தார்.அப்போது பொருளாதார மந்த நிலையால் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய வரி குறைந்துள்ளது. புதுச்சேரியை பொருத்தவரையில் வாகனங்கள் விற்பனை குறைந்துள்ள காரணத்தால் வருவாய் குறைந்துள்ளது. மத்திய அரசு ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் தர வேண்டிய நிதி 14 சதவீத இழப்பீட்டு தொகை கடந்த ஆகஸ் முதல் வழங்க வேண்டிய சுமார் ரூ.380 கோடி தரவில்லை. புதுச்சேரி வரியை நம்பியுள்ள மாநிலம். புதுச்சேரி மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதி கொடுக்காத காரணத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் 18ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இப்பிரச்சனையை எழுப்பி, நிதி அமைச்சர் ஒத்துழைக்க கேட்க உள்ளோம் என்றார்.

தொடர்ந்து துணை நிலை ஆளுநர் பல்வேறு கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். கிரண்பேடியின் உத்தரவை மத்திய அரசு ஏற்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆளுனர் அல்லது துணை நிலை ஆளுநர் தனது முடிவை மத்திய அரசு ஏற்காவிட்டால் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

பேட்டி- நாராயணசாமி - முதலமைச்சர்Conclusion:புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அனுப்பும் கோப்புகளை மத்திய அரசு நிராகரிக்கின்றது. மத்திய அரசு துணை நிலை ஆளுநரை மதிக்கவில்லை என்று தெரிகின்றது. இதனால் துணை நிலை ஆளுநர் தனது முடிவை மத்திய அரசு ஏற்காவிட்டால் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.