புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்குமிடையே அவ்வப்போது கருத்து மோதல் ஏற்பட்டுவருகிறது. ஒருவரை ஒருவர் விமர்சித்தும் அரசின் மீதான குறைகளை எடுத்துக் கூறி சண்டையிடுவார்கள்.
புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளை கிரண்பேடி சமூக வலைதளத்தில் தொடர்ந்து விமர்சித்துவருகிறார். கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்புக் காரணமாக சமீபகாலமாக அவர் எந்த ஒரு விமர்சனம் செய்யாத நிலையில் இருந்தார். இந்நிலையைில், அவர் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் புதுச்சேரி அரசை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அலுவலர்கள் சேர்ந்தே உட்கார்ந்திருப்பது தவறு என்றும், பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனைவரும் தனித்து அமர்ந்து இருப்பதைச் சுட்டிக்காட்டி இதுதான் சரி என்றும் புகைப்படத்தை வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கு ஆளும் கட்சியினர் கிரண்பேடியை கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவை மீறியதாக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு