டெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு பணிபுரியும் மற்ற ஊழியர்களையும் மருத்துவர்கள் சோதனைசெய்தனர். அதில் வேறு யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, அங்கு பணிபுரியும் அலுவலர்கள் அவர்களது குடும்பத்தினருடன் வீட்டுல் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கும்படி சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவரிடம் தொடர்பிலிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரைக் கண்டறிந்து அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: பிறந்தநாள் கொண்டாட சேமித்த பணத்தை கரோனா நிதிக்கு வழங்கிய சிறுமி