மங்கோலிய நாட்டின் குடியரசுத் தலைவர் கால்ட்மாகின் பட்டுல்கா இந்தியாவுடன் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ள ஐந்து நாள் பயணமாக இந்தியா வருகை தரவிருந்தார். இதையடுத்து நேற்று இந்தியா வந்த அவருக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமையில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அதன்பின், இந்திய குடியரசுத் தலைவர் தலைமையில் ராஷ்டிரபதி பவனில் மங்கோலிய குடியரசுத் தலைவருக்கு விழா நடத்தப்பட்டது.
இந்நிலையில், கால்ட்மாட்கின் பட்டுல்கா பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை சந்தித்தார். பின்னர், கால்ட்மாட்கின் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் மங்கோலியத்தலைநகர் உலன்பாதரில் அமைக்கப்பட்டுள்ள புதிய புத்தர் சிலையைக் கூட்டாக திறந்து வைத்தனர். இரு நாடுகளுக்கிடையேயான மத ரீதியான நல்லுறவுக்கான எடுத்துக்காட்டாக புத்தர் சிலை திறக்கப்பட்டதாக பிரதமர் அலுவலக தரப்பில் கூறப்பட்டுள்ளது.