கடந்த மாதம் கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் ராஜமலா வாகனச் சோதனை சாவடி அருகே ஜீப்பில் பயணித்த பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது மடியில் இருந்து அவரது ஒரு வயது பெண் குழந்தை தவறுதலாக சாலையில் விழுந்துள்ளது.
இதுகுறித்து அக்குழந்தையின் பெற்றோர் காவல்துறையில் புகார் செய்து, குழந்தையை தேடிவந்த நிலையில், அக்குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் குழந்தையை வனத்துறையினர் காப்பற்றியதாகக்கூறி வந்தநிலையில், குழந்தை விழுந்த பகுதியின் சிசிடிவி காட்சி மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்யப்பட்டதில், குழந்தையை காப்பாற்றியது அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் என்று தெரிய வந்துள்ளது.
சம்பவம் நடந்த இரவில் குழந்தை தவிழ்ந்து வருவதைக் கண்ட வனத்துறையினர், அக்குழந்தையைப் பேய் என்று அஞ்சி,விட்டுவிட்டுச் சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. வனத்துறையினர் காப்பாற்றியதாக கூறப்பட்ட நிலையில், அதை மக்கள் அனைவரும் நம்புவதற்காக சிசிடிவி காட்சிகளை வனத்துறையினர் பாதியாக கத்தரித்து, எடிட் செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.