கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று காரணமாக மார்ச் 25ஆம் தேதிமுதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுப்போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அனைத்துப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் அமைந்துள்ள புதுவை பல்கலைக்கழகத்தில் படித்துவரும் ஐம்பதிற்கும் மேற்பட்ட கேரள மாணவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்லமுடியாமல் தவித்துவந்தனர்.
இதையறிந்த இளைஞர் காங்கிரஸ், மாணவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் பணியினை மேற்கொண்டது. இதையடுத்து, சட்டப்பேரவை வளாகத்திலிருந்து தனிப்பேருந்து மூலம் மாணவர்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அப்போது, முதலமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.எஸ். சுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ‘பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு அரசின் புதிய வழிகாட்டுதல்கள்’