ETV Bharat / bharat

பழங்குடியின மாணவி தற்கொலை : கேரளாவில் தீவிரமடையும் போராட்டம்!

author img

By

Published : Jun 3, 2020, 5:45 PM IST

திருவனந்தபுரம் : ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத மன வருத்தத்தில் தற்கொலை செய்துகொண்ட பழங்குடியின மாணவிக்கு நீதி கேட்டு மலப்புரம் மாவட்டத்தில் நடந்து வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

kerala protest
kerala protest

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கடந்த மூன்று மாதங்களாகப் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் வரை மாணவர்களின் கல்விக்கு எவ்வித தடையும் ஏற்படக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் கேரள அரசு, அங்குள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கும் திட்டத்தை திங்கள்கிழமை முதல் செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கேரளாவின் மலப்புரம் மாவட்டம், வேலன்சேரி பகுதியைச் சேர்ந்த 14 வயது பழங்குடியின மாணவி ஒருவர், ஏழ்மை காரணமாக ஆன்லைன் வகுப்பில் சேர முடியாமல் போனது. இதனால் மனமுடைந்து அந்த மாணவி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டார்.

காவல் துறையினருடன் போராடும் இளைஞர்கள்

இந்தச் சம்பவம் அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்துக்கு நீதி கோரியும், சமூக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மாணவர்களின் தேவையை அறிந்து அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மலப்புரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வித் துறை அலுவலகம் முன்பாக பல்வேறு மாணவர், இளைஞர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரமடைந்து வரும் இந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு அலுவலர்கள் திக்குமுக்காடிப் போயுள்ளனர். முன்னதாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்குக் கடிதம் எழுதியிருந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, பழங்குடியின மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடம் பெறத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும படிங்க : உத்தரகண்ட் தலைநகராக கெய்சைனை அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.