கேரளா மாநிலம், கொச்சியைச் சேர்ந்த முன்னாள் பி.எஸ்.என்.எல் ஊழியர் பாத்திமா, அக்டோபர் 2018 ஆண்டு சபரிமலை கோயில் நுழைவு தொடர்பாக இவர் மீது இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், அவர் காணொலி ஒன்றை பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். அதில், அவரது மைனர் மகனும் மகளும் அவரது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைவதைக் காண முடிந்தது.
அந்தப் பதிவில் அவர், "தனது தாயின் நிர்வாணத்தையும் உடலையும் பார்த்த எந்தக் குழந்தையும் பெண் உடலை துஷ்பிரயோகம் செய்ய முடியாது." பாடிஆர்ட் மற்றும் பாலிடிக்ஸ் என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி எழுதினார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த கேரள மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அவர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு காவல் துறையிடம் புகார் அளித்தது.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, அவர் உயர் நீதிமன்றத்தில் முன்கூட்டியே ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று (ஜூலை24) நடைபெற்றது. அப்போது அவரது நடவடிக்கைகள் காரணமாக மனுவை நிராகரித்த நீதிமன்றம், காவல்துறையினர் விசாரணையை மேற்கொள்ளலாம் எனக் கூறியது.
இதையும் படிங்க: ரூ. 7000 கையூட்டு: தெலங்கானாவில் கையும் களவுமாக சிக்கிய மருத்துவ அலுவலர்