குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராக முதல் மாநிலமாக கேரளா நேற்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்திருந்தது. அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டுவர, காங்கிரசும் அதனை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. ஒரெயொரு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் மட்டும் இத்தீர்மானத்துக்கு ஆதரவளிக்கவில்லை. இந்தச் சூழலில் மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் நரசிம்ம ராவ், பினராயி விஜயனுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்தார்.
இந்த நிலையில் கேரள அரசின் தீர்மானம் தொடர்பாக கருத்து கூறிய கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், "குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிரான கேரள அரசின் தீர்மானம் சட்டரீதியாகவும் அரசியலமைப்பு ரீதியாகவும் செல்லுபடியாகாத ஒன்று. ஏனென்றால், குடியுரிமை திருத்தச் சட்டம் பொதுப்பட்டியலில் உள்ளது. அதனால் கேரள அரசின் தீர்மானத்தால் எதுவும் நடக்காது" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சரவைப் பகிர்வு பிரச்னை: கூட்டணிக் கட்சிகள் பேச்சுவார்த்தை