ETV Bharat / bharat

கேரள தங்கக் கடத்தல், பெங்களூரு போதைப் பொருள் மாஃபியா இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பா? - ரமேஷ் சென்னிதலா

திருவனந்தபுரம்: கேரளாவில் சர்ச்சையை கிளப்பியுள்ள தங்கக் கடத்தல் வழக்குக்கும், அண்மையில் நாட்டையே உலுக்கிய பெங்களூரு போதைப் பொருள் மாஃபியாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.

கேரள தங்கக் கடத்தல் - பெங்களூரு போதைப் பொருள் மாஃபியா இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பா?

author img

By

Published : Sep 4, 2020, 8:56 PM IST

இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசிய கேரள எதிர்க்கட்சித் தலைவரும், அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவருமான ரமேஷ் சென்னிதலா, "தங்கக் கடத்தல் வழக்கில் பிரதான குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் கேரளாவிலிருந்து தப்பித்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்தது நாடறிந்த உண்மை.

அண்மையில், நாட்டையே உலுக்கிய போதைப் பொருள் மாஃபியாவும் அங்கிருந்தே இயங்கியதாக தெரிகிறது. இதன் மூலமாக இவற்றுக்கு இடையே நெருங்கிய தொடர்புகள் உள்ளன என்பது மிகத் தெளிவாக அறியலாம். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அனூப் முகமதை தனக்கு தெரியும் என்று சிபிஐ(எம்) மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேரியே வெளிப்படுத்தி உள்ளார்.

போதைப்பொருள் வழக்கில் பாலகிருஷ்ணனின் மகனுக்கு என்ன தொடர்பு?. இது குறித்த அவரது மௌனம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அவர் தனது மௌனத்தை உடைக்க வேண்டும். பினராயி விஜயன் அரசுடன் அனைத்து வகையான வழக்குகளும் சுற்றி வருகின்றன.

ஊரடங்கின் போது குமாரகோமில் உள்ள ஒரு ரிசார்ட்டில் ஒரு இரவு விருந்து நடைபெற்றது பற்றி செய்தி வெளிவந்துள்ளதை அரசு கவனிக்க வேண்டும். இந்த இரவு விருந்தில் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.