ETV Bharat / bharat

நேற்று காணாமல் போன பாதிரியார் இன்று பிணமாக மீட்பு! - Catholic priest

திருவனந்தபுரம்: கோட்டயத்தில் நேற்று காணாமல் போன கத்தோலிக்க பாதிரியார் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேவாலயத்தின் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பாதிரியாரின் உடல்

author img

By

Published : Jun 22, 2020, 2:10 PM IST

ஐம்பத்தேழு வயதான தாமஸ் எட்டுபராயில் கடந்த ஆண்டு அமெரிக்காவிலிருந்து திரும்பி கேரள மாநிலம் கோட்டயம் அருகே புன்னத்துரா செயின்ட் தாமஸ் தேவாலயத்தின் போதகராக தாமஸ் எட்டுபராயில் என்பவர் பொறுப்பேற்றார்.

கடந்த ஞாயிறன்று காலையில் பாதிரியாரை சந்திக்க சென்ற பாரிஷனர்கள் அவர் அறையில் இல்லாததைக் கண்டு அவருக்கு தொலைபேசியில் அழைத்தனர். அப்போது அவரது மொபைல் அறையில் இருந்தது.

இதனால் பாதிரியார் காணாமல் போனதாக காவல்துறையில் புகார் தெரிவித்தனர். புகாரைத் தொடர்ந்து தேடத் தொடங்கிய காவல்துறையால் அவரை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

பாதிரியார் அறையில் சி.சி.டி.வி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததை கண்டு பிடித்த காவல்துறையினர் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தேவாலயத்தின் கிணற்றில் பாதிரியார் தாமஸின் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலின் அருகே ஒரு பிளாஸ்டிக் கயிறும் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிரியார் திருச்சபை மக்களிடையே பிரபலமாக இருந்தார். தேவாலயத்தில் சில ஆவணங்கள் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு பிறகு, அவர் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.