டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் கேரளா பாஜக தலைவர் கிருஷ்ண தாஸ், சிஏஏ-வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியையும கடுமையாக விமர்சித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நாட்டின் நலனுக்கு எதிராக கேரளாவின் ஆளுங்ட்சியும், எதிர்க்கட்சியும் செயல்படுகின்றன. அவர்கள் தீவிரவாதிகளால் உந்தப்படுகிறார்களா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகின்றன.
சிஏஏ-வுக்கு எதிராக நடைபெறும் போரட்டக்காரர்களுக்கு தீவிரவாதிகள் பணம் அனுப்புவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றே கேரள பாஜக விரும்புகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கேரள ஆளுநர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆளுநர் என்பவர் இந்திய அரசின் பிரதிநிதி. ஆளுநரை அவமானப்படுத்துவது அரசியலமைப்பை தேசப்படுத்துவதற்கு சமம். ஆளுநரை திரும்பப்பெறவேண்டும் என்று மத்திய அரசை அவர்கள் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்) வலியுறுத்துகின்றனர். இது தேவையற்ற கோரிக்கை. சிஏஏ-வுக்கு எதிராக போராடுவது என்பது நாட்டின் ஜனநாயகத்துக்கு எதிராக போராடுவதைப் போன்றது, ஏனென்றால் அந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய சமூக ஜனநாயகக் கட்சியும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகியவை சிபிஐ (எம்) மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு பொதுவானவையாக உருவெடுத்துள்ளன. இவ்விரு அமைப்புகள் நடத்தும் சிஏஏ எதிர்ப்பு போராட்ட மேடைகளில் இரு கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். கேரளாவை ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இதே நிலைப்பாட்டில் இருந்தால், அது மேலும் சிக்கலையே உருவாக்கும். நாட்டின் பிற பகுதி மக்கள் சிஏஏ-வை ஏற்றுக்கொண்டபோதும், கேரளாவில் மட்டும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகிறது. காங்கிரஸ் மற்றும் சிபிஐ (எம்) கேரளாவை மோசமான நிலையில் வைத்துள்ளது”என்றார்.
இதையும் படிங்க: போக்சோ வழக்கை விரைந்து முடிக்க மாநிலங்களுக்கு உள் துறை அமைச்சர் வலியுறுத்தல்