கேரளா மாநிலத்தில் அதிகளவில் போதை பொருள் கடத்தல் சம்பவம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் வயநாடு மாவட்டத்தில் நேற்று(டிசம்பர்-10) 100 கிலோகிராம் எடை கொண்ட போதை பொருட்களை கடத்த முற்படும்பொழுது, கலால் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் கோழிக்கோட்டைச் சேர்ந்த சலே, ஆபிட் என்ற இரண்டு பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் கொச்சி அருகே கலால் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 140 கிலோகிராம் போதைப் பொருளை எர்ணாகுளம் காவல் துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அங்கமாலி, பெரம்பவூர் ஆகிய இரு இடங்களிலிருந்து இந்த போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.