கனமழை காரணமாக கேரளாவின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களால் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ச்சனா (11), முரளிக்கா (5) ஆகிய சகோதரிகள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக, அவர்களின் தாய் தேவி எழுதிய 'பச்சிலா' என்ற கவிதைப் புத்தகத்தை வீதி விதியாகச் சென்று விற்று வருகின்றனர். இதன்மூலம் இதுவரை நான்காயிரம் ரூபாய் சம்பாதித்துள்ளனர்.
அடுத்ததாக தாங்கள் திரட்டியுள்ள இந்த நிதியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக வழங்குவதே இவர்களின் திட்டமாகும். இந்த சகோதரிகளின் நல்ல குணத்தை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.