டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த எட்டாம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அக்கட்சி 62 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாஜகவால் எட்டு இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.
காங்கிரசால் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி இடைநிலை ஆளுநர் அனில் பைஜாலை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது பதவியேற்பு குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.
2015ஆம் ஆண்டில் ஆட்சியமைத்த ஆம் ஆத்மி அரசின் ஆட்சிக்காலம் முடிவடைவதையடுத்து, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முறைப்படி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பின்னர் புதிதாகப் பதவியேற்கிறார். இந்தப் பதவியேற்பு விழா ராம் லீலா மைதானத்தில் வருகிற 16ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க : ஒன்னுமில்லாத கட்சியை எந்த ஆலோசகர் வந்தும் வெற்றி பெற வைக்க முடியாது: கார்த்தி சிதம்பரம்