இது தொடர்பாக மணிப்பால் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் சுதர்சன் பல்லால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், "கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையாவுக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்ட காரணத்தால் கோவிட்-19 கண்டறிதல் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் ஆகஸ்ட் 4 அன்று பழைய விமான நிலைய சாலையில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கோவிட் -19 பாதிப்பிற்கான சிறப்பு சிகிச்சையானது பல்துறை மருத்துவர்கள் அடங்கிய வல்லுநர் குழுவால் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சிகிச்சையில் பல நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. இன்று அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு பாதிப்பு குணமாகியிருப்பது கண்டறியப்பட்டது.
சித்தராமையாவின் உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லை என உறுதிசெய்யப்பட்டதை அடுத்து மருத்துவ வழிகாட்டுதல்களின்படி அவர் இன்று வீட்டிற்கு அனுப்பப்பட்டார். அவர் பூரண குணமடைந்துள்ளதை கூறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
மருத்துவக்குழுவினர் தொடர்ந்து அவரை கண்காணிப்பர். சில நாள்கள் அவரை வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தியுள்ளோம். மணிப்பால் மருத்துவமனை குழுமத்தின் சார்பாக அவரை வாழ்த்த விரும்புகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.