கரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இருப்பினும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் அனைவரும் திணறி வருகின்றனர்.
அந்த வகையில், கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் கடுமையான சுவாச பிரச்னைகளுடன் 80 வயதான மூதாட்டி ஒருவர் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
அவருக்கு கரோனா தொற்று இருப்பது ஏப்ரல் ஆறாம் தேதி உறுதியானது. பின்னர் அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நெஞ்சு வலி ஏற்பட்டு இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இதனால், அம்மாநிலத்தில் கரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அங்கு 181 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’இவன் கரோனாவை பரப்ப வந்துருக்கான்’ - அச்சத்தில் இளைஞர் அடித்துக் கொலை