கர்நாடக மாநிலம் சிவமொக்கா பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த இரண்டு மாத குழந்தையின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால், அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக மங்களூரூவில் உள்ள மருத்துவமனைக்கு அவசரமாக மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையின் உதவியை நாடியுள்ளது. பின்னர், ஆம்புலன்ஸ் செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்தை சீர்செய்து ஆம்புலன்ஸ் அதிவேகத்தில் செல்வதற்கு காவல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
காவல் துறையின் உதவியால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் 250 கிமீ தூரத்தை ஜஸ்ட் 3 மணி நேரத்தில் கடந்து மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தார். தற்போது, குழந்தை நல்லபடியாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறது.