புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத் துறையினர், வருவாய்த் துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினரும் தீவிரமாக நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதைப்போன்று சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்திட காவல் துறையினரும் தொடர்ந்து பாதுகாப்பு, ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுவருவதால், அவர்களின் பணிச்சுமை அதிகரித்துவருகிறது.
இதனைக் குறைக்க எண்ணிய காவல் துறையினர், காவல் துறையில் பல்வேறு பணிக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் இளைஞர்களைக் கரோனா தடுப்புப் பணி தன்னார்வலர்களாகக் காவலர்களுடன் இணைந்து பணிசெய்யும் வாய்ப்பினை வழங்கியுள்ளனர்.
இந்தத் தன்னார்வலர்கள் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருள்களை வாங்க அனுமதிக்கப்பட்ட நேரங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், போக்குவரத்தைச் சீராக்குதல் உள்ளிட்ட பணிகளில் காவலர்களுக்கு உதவுகின்றனர்.
இவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு காலை, மாலை என காரைக்கால், திருநள்ளாறு, நெடுங்காடு உள்ளிட்ட பகுதிகளில் தங்களது பணிகளை மேற்கொள்கின்றனர்.
இதையும் படிங்க: இரவு பகலாக காவல் துறையினருடன் பணியாற்றும் தன்னார்வலர்கள்!