புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து திருவாரூர் மாவட்டம் பேரளம் வரையிலான அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியானது.
இது குறித்து இன்று புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தலைமையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதற்கட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த்ராஜா, தெற்கு ரயில்வே அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, காரைக்கால்-பேரளம் அகல ரயில்பாதை பணிகள் குறித்த கள ஆய்வு பணி செய்யப்பட்டு, எந்தெந்த பகுதியில் மேம்பாலம், சுரங்க பாதைகள் தேவை என சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் கேட்டறிந்தார்.