கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி காரைக்கால் ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அமைச்சரிடம் மனு அளித்தனர்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சட்ட கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இறுதி தேர்வை ஒத்தி வைக்கக் கோரி மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மாணவர்கள் கலைந்துச் சென்றனர்.