இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பல்கலைக்கழகங்களை அழிப்பது என புதிய கலாசாரம் ஒன்று உருவெடுத்துள்ளது. முகமூடி அணிந்துகொண்டு வலதுசாரிகள் ஜாமியா பல்கலைக்கழகத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். நூலகங்களுக்குள் நுழைந்து அதனை சூறையாடினர். கார்கி கல்லூரியில் அச்ச உணர்வை பரப்பி வருகின்றனர். சுற்றுச்சுவரை உடைத்து உள்ளே புகுந்து பெண்களை பாலியல் ரீதியாத துன்புறுத்தினர். அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க காத்திருக்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பிப்ரவரி 6ஆம் தேதி டெல்லி கார்கி கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவின்போது அடையாளம் தெரியாத கும்பல் கல்லூரியின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து, பெண் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அக்கல்லூரி முதல்வர் பிரோமிலா குமார் தெரிவித்துள்ளார். இந்தக் குழு புகார்தாரர்கள், சாட்சியங்கள், சம்பவம் குறித்து அறிந்த நபர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் என அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ஷுட்டிங் இல்லாட்டி பரவாயில்லை, இருக்கவே இருக்கு பஜ்ஜி சுடும் வேலை? சூரி மாஸ்டர் அவதாரம்