ETV Bharat / bharat

”பெண்களுக்கு தொந்தரவு கொடுத்தால் இனி ஷாக் ட்ரீட்மெண்ட் தான்!” - உ.பி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு! - டிங்கர் இந்தியா நிறுவனர் உமர்

லக்னோ: நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக ’ஷாக் கீ செயின்’ ஒன்றை கல்லூரி மாணவி ஒருவர் வடிவமைத்துள்ளார்.

eykey
ey
author img

By

Published : Oct 12, 2020, 1:54 PM IST

உத்தரப் பிரதேசம், கான்பூரில் வசிக்கும் பூஜா படேல், கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில், புதிதாக ஷாக் கீ செயின் ஒன்றை டிங்கர் இந்தியா நிறுவனத்தின் உதவியுடன் வடிவமைத்துள்ளார். இதற்கு 'எமர்ஜென்சி ஷாக் கீ செயின்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இது குறித்து பூஜா கூறுகையில், "இந்தக் கருவியில் உள்ள பொத்தனை அழுத்தினால், அதிலிருந்து 220 - 440 வோல்ட் மின்சாரம் பாயக்கூடும். இந்த மின்சாரம் குற்றவாளியை மயக்கமடையச் செய்ய போதுமானது ஆகும். பெண்களிடம் வலுக்கட்டாயமாக தொந்தரவு செய்யும் நபர்களுக்கு, இந்தக் கீ செயின் ட்ரீட்மெண்ட் சரியாக இருக்கும். இது ரீசார்ஜபிள் பேட்டரி கொண்டுள்ளதால் சார்ஜ் செய்வதும் மிகவும் எளிது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "12ஆம் வகுப்பு படிக்கும் எனது சகோதரன் சிவா, தொழில்நுட்பரீதியாக இந்தக் கருவியை உருவாக்குவதற்கு பெரிதும் உதவி செய்தார். அவரின் திறமையால் தான், இந்தக் கருவியை மிகவும் சிறியதாக வடிவமைக்க முடிந்தது. மேலும், வீட்டிலிருந்த பழைய பொருள்களை உபயோகித்தன் மூலம் 300 ரூபாயில் சாதனத்தை வெற்றிகரமாக வடிவமைக்க முடிந்தது. இந்த சாதனம் நிச்சயமாக நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கு சென்றடையும் என நான் நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய டிங்கர் இந்தியா நிறுவனர் உமர், இந்த சாதனத்திற்கு பூஜாவின் பெயரிலே காப்புரிமை பெற விரும்புவதாகவும், தொழில்நுட்ப நிறுவனங்கள், மாநில அரசின் ஒத்துழைப்புடன் இந்த சாதனம் நிச்சயமாக சந்தையில் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.