ETV Bharat / bharat

பாஜக மூத்த தலைவரின் மருமகனை கடத்தி கொல்ல முயற்சி?

லக்னோ: பாஜக பொதுச் செயலாளர் உமேஷ் திவேதியின் மருமகனை கடத்தி கொலை செய்ய முயன்றதாக சிலர் மீது உத்தரப் பிரதேச காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

BJP leader's nephew
BJP leader's nephew
author img

By

Published : Dec 16, 2020, 7:23 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் காதம்பூரில் உள்ள கான்பூர்-பண்டா ரயில் பாதையில் 28 வயது மதிக்கத்தக்க ஒருவர், இடது கை வெட்டப்பட்ட நிலையில் கிடந்தார். இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

யார் அந்த நபர்?

தகவலறிந்து வந்த காவல் துறையினர், ரயிலில் அடிப்பட்டு கிடந்த நபர் பாஜக பொதுச் செயலாளர் உமேஷ் திவேதியின் மருமகன் லலித் என கண்டறிந்தனர். அவரது உடலை மீட்டு உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்தில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை முடிந்த பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லலித்தின் உறவினர்கள், பாஜக எம்எல்ஏ., தேவேந்திர சிங் ஆகியோர் காவல் துறையினரிடம் விசாரணையை துரிதப்படுத்த வலியுறுத்தினர்.

இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லலித்தை கடத்திய கும்பல் கொலை செய்யும் நோக்கில் அவரை கான்பூரில் ஒரு சரக்கு ரயில் முன்னால் வீசிவிட்டு சென்றிருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

லலித் ஏன் கடத்தப்பட்டார்?

முன்னதாக, லலித் தனது கிராமத்தில் நடந்த ராம்லீலா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது கிராமத்தில் உள்ள சிலருக்கும் லலித்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் லலித்தை காரில் பலவந்தமாக கடத்திச் சென்று தாக்கியதுடன் ரயில் பாதையில் தூக்கி வீசியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வீட்டின்முன் நிறுத்தப்பட்டிருந்த கார் திருட்டு: சிசிடிவி காட்சிகள் மூலம் இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.