ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தங்களின் கருத்துகளை கூறிவருகின்றனர். பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று மாணவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இந்நிலையில், மற்றொரு பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் பங்கா பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர், "ஜேஎன்யு மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜேஎன்யு, ஏபிவிபி ஆகிய மாணவர் அமைப்புகளுக்கு மோதல் இருந்தது தெரிய வருகிறது. நான் கல்லூரி பயிலும்போதும் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே மோதல் இருந்தது. நான் தங்கிய மகளிர் விடுதிக்கு அருகே ஆண்கள் விடுதி இருந்தது. ஒரு நாள் ஒரு மாணவர் எங்கள் விடுதிக்குள் குதித்தார். அவரை ஒரு கும்பல் துரத்தியது. அப்போது, விடுதி மேலாளர்தான் அந்த மாணவரைக் காப்பாற்றினார்.
இதுபோன்று இரு பிரிவுகளுக்கிடையே நடக்கும் மோதலை அதிகாரத்தில் இருப்பவர்கள் தூண்டி விடுகின்றனர். இரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தேசிய விவகாரமாக ஆக்கக் கூடாது. குற்றம் புரிந்தவர்களை காவலில் எடுத்து நான்கு அறைகள் விட வேண்டும். இதனை அரசியல் ஆக்கக் கூடாது" என்றார்.
இதையும் படிங்க: 'குடியுரிமை திருத்தச் சட்டம்' பாஜகவுக்கு தேர்தல் லாபத்தை தருமா?