உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்யின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே பதவியேற்கிறார். இன்று காலை 9.30 மணியளவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
ரஞ்சன் கோகோய்க்கு அடுத்தபடியாக மூத்த நீதிபதி என்ற அடிப்படையில் எஸ்.ஏ. பாப்டே புதிய தலைமை நீதிபதியாகிறார். இன்று பதவியேற்கும் பாப்டே அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 2021 ஏப்ரல் 23ஆம் தேதி வரை பதவி வகிப்பார்.
1956 ஏப்ரல் 24ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பிறந்த பாப்டே, நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார். 1978ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை வழக்கறிஞராக பணியைத் தொடந்த இவர், 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தின் துணை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2012ஆம் ஆண்டு அக்டோபரில் மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், தொடர்ந்து 2013ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்து வந்தார்.
அயோத்தி உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த ஐந்து நீதிபதிகள் அமர்வில் பதவி வகித்து வந்த பாப்டே தற்போது, புதிய தலைமை நீதிபதியாகியுள்ளார்.
சபரிமலைக்கு செல்பவர்கள் அர்பன் நக்சல் - சர்ச்சையை கிளப்பும் மத்திய அமைச்சர்