இது குறித்து அவர் பேசுகையில், "புதுச்சேரியில் தற்போது புதிதாக வங்கி பணியாளர், கர்ப்பிணி, வீட்டு வேலை செய்யும் பெண் உள்ளிட்ட 4 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 37 பேர் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுவரை புதுச்சேரியில் 7,043 பேருக்கு உமிழ் நீர் சோதனை செய்யப்பட்டதில் 6,910 பேருக்கு கரோனா பாதிப்பில்லை என முடிவுகள் வந்துவிட்டன. ஜூன் 1ஆம் தேதி முதல் புதுச்சேரியில் எவ்வாறான தளர்வுகள் அளிக்கப்படும் என்பதை முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பார்.
அதுமட்டுமல்லாமல் குறிப்பாக கரோனா வைரஸ் தாக்கம் ஜூன், ஜூலை மாதங்களில் 10 மடங்கு அதிகரிக்கும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பருவமழை தொடங்கவிருப்பதால் விவசாயம் சார்ந்த பணிகள் தொடங்கப்படும். திரையரங்குகள் திறக்கப்படாது. உணவகங்களை திறக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, புதுச்சேரி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு கரோனா பாதிப்பு