ஒடிசாவின் பந்தூடி பகுதியிலுள்ள கோண்டோ பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஜூலிமா. குடும்பத்தில் நிலவி வந்த கடும் ஏழ்மை காரணமாகப் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய அவர், குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குச் சென்றார். அப்போது தொண்டு நிறுவனம் ஒன்றில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், குழந்தை திருமணங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடிவந்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் ஜூலிமாவின் முயற்சியால் அவரது பழங்குடியினத்தில் நடைபெறவிருந்த 12 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பின் திறந்தவெளி பள்ளில் சேர்ந்து தனது படிப்பைத் தொடர்ந்த அவர், தனது நண்பர்களையும் அந்த பள்ளியில் சேர்த்து அவர்களும் கல்வி கற்க உதவியுள்ளார். அதுமட்டுமல்லாமல், பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய அவரது நண்பர்கள், திறன் சார்ந்த பயிற்சிகளை பெறவும் ஜூலிமா உதவியுள்ளார்.
சுற்றியுள்ள கிரமங்களிலுள்ள பழங்குடி இனத்தின் குழந்தைகளின் உரிமையைக் காப்பதிலும் குழந்தை திருமணங்களை தடுப்பதிலும் தற்போது ஜூலிமா கவனம் செலுத்திவருகிறார். குழந்தைகள் கல்வி கற்கவும் குழந்தை திருமணங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வரும் இவர், யுனிசெப் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் 10 பேர் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தங்களை சுற்றியிருக்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக உழைக்கும் நபர்களுக்கு யுனிசெப் விருது வழங்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: வீழ்கிறதா மோடி - அமித் ஷா இணை?