பாரத ரிசர்வ் வங்கி, நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வங்கியாக இருந்துவருகிறது. தன்னாட்சி அதிகாரம் கொண்ட ரிசர்வ் வங்கியின் தலைமையகம் மும்பையில் செயல்பட்டுவருகிறது. ரிசர்வ் வங்கியில் 201 ‘பி’ கிரேடு காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது, பொருளாதார கொள்கை மற்றும் ஆராய்ச்சி, தகவல் மேலாண்மை துறை ஆகிய பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
பணி / காலியிடங்கள் விவரம்:
- பணி (பொது): உயர் அலுவலர்கள் Grade ‘B’(DR)- பொது | காலியிடங்கள்: 156
- பணி (பொருளாதார கொள்கை & ஆராய்ச்சி) : உயர் அலுவலர்கள் Grade ‘B’(DR)- DEPR | காலியிடங்கள்: 22
- பணி (தகவல் மேலாண்மைத் துறை) : உயர் அலுவலர்கள் Grade ‘B’(DR)- DSIM | காலியிடங்கள்: 23
கல்வித்ததகுதி:
பொதுப்பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 60 விழுக்காடு மதிப்பெண்களுடன், ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். DEPR, DSIM ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள், துறைசார்ந்த பாடப்பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.09.2019 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். எம்.ஃபில் (MPhil) முடித்தவர்களுக்கு உச்சபட்ச வயதுவரம்பில் 32, முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு உச்சபட்ச வயதுவரம்பு 34 ஆகும்.
எழுத்துத் தேர்வு:
இணைய வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இணைய எழுத்துத் தேர்வு தாள் 1, தாள் 2, தாள் 3 என மூன்று எழுத்துத்தேர்வுகளாக நடைபெறும்.
இணைய எழுத்துத் தேர்வு மையம்:
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு நடக்கும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப்பிரிவினர், ஓபிசி எனப்படும் மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.850, எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ரிசர்வ் வங்கி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்:
இணையத்தில் விண்ணப்பப் பதிவு தொடங்கிய தேதி | செப். 21 |
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி | அக். 11 |
பொது, DEPR, DSIM துறைக்கான தாள் 1 தேர்வு நடைபெறும் தேதி | நவ. 09 |
பொதுத் துறைக்கு மட்டுமான தாள் 2 தேர்வு தேதி | டிச. 01 |
இணையத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | அக். 11 |
சம்பள விவரங்கள்:
மாத அடிப்படை ஊதியம் 35 ஆயிரத்து 150 ரூபாய் என்ற வகையில் 35150-1750 (9)-50900-EB-1750 (2)-54400-2000 (4)-62400 ஆகிய ஊதிய விகிதத்தில் வழங்கப்படும். இதர படிப்பலன்கள் சேர்த்து மாதம் சுமார் ரூபாய் 77 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.