புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை அருகே நேற்று இரவு காவல் துறையினர், சுகாதாரத் துறை ஊழியர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த காரை நிறுத்திய காவல் துறையினர், அதில் இருந்தவர்கள் முகக்கவசம் அணியாமல் வந்ததை அறிந்து அவர்களை அபராதம் செலுத்த அறிவுறுத்தியுள்ளனர்.
அப்போது காரில் இருந்த நபர், “நான் தினந்தோறும் ரிஸ்க் எடுத்து கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். கரோனாவில் இருந்து எனக்கு என்னை பார்த்துக்கொள்ளத் தெரியும். எனது குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளத் தெரியும். நான் ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர். அபராதம் கட்ட வேண்டுமா கட்டுகின்றேன்” என்று வாக்குவாதம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தற்போது அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: ஜூன் 8ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்களுக்கு தளர்வு - நாராயணசாமி அறிவிப்பு