ETV Bharat / bharat

லாலுவின் பிணை மனு மீதான விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்! - லாலு பிரசாத் யாதவ்

ராஞ்சி : கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் உள்ள பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் பிணை மனு மீதான விசாரணையை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

லாலுவின் பிணை மனு மீதான விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்!

author img

By

Published : Aug 28, 2020, 6:29 PM IST

1992-93ஆம் ஆண்டில் பிகார் மாநில முதலமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது, மாட்டுத்தீவன கொள்முதலில் ரூ. 950 கோடி ஊழல் செய்ததாகவும், ரூ. 33.67 கோடி சாய்பாசா கருவூலப் பணத்தை மோசடி செய்ததாகவும் அவர் மீது ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள் பதியப்பட்டிருந்தன.

நீண்ட நாள்களாக நடைபெற்றுவந்த இந்த வழக்கு விசாரணையில் லாலு உள்ளிட்ட 16 பேரை குற்றவாளிகள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டில் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறுநீரகங்கள் செயலிழந்து உடல்நலம் மோசமடைந்த நிலையில் லாலு 2019ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 1ஆம் தேதியன்று ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அடிக்கடி, உடல் நிலை பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த மாதம் மீண்டும் உடல்நலக் குறைவால் ராஞ்சி ராஜேந்திர மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (ரிம்ஸ்) மருத்துவமனையில் லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைப் பெற்றுவருகிறார். அங்கு லாலுவின் பாதுகாப்பிற்காக காவலர்கள் சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்தனர். இதனிடையே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தவர்களில் ஒன்பது பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அறிய முடிகிறது.

லாலுவின் உடல்நிலையை சுட்டிக் காட்டி, அவருக்கு பிணை வழங்குமாறு அவரது குடும்பத்தினர் சார்பில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 28) விசாரணைக்கு ஏற்றது. தீவன ஊழல் தொடர்பான வழக்கு தொடர்பாக பிகார் முன்னாள் முதலமைச்சரும், ஆர்ஜேடி தலைவருமான லாலு யாதவின் பிணை மனு மீதான விசாரணையை செப்டம்பர் 11ஆம் தேதி தள்ளிவைத்தது.

அப்போது லாலு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் தேவர்ஷி மண்டல், "உடல் நல குறைவால் அவதியுற்று வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஏற்கனவே ஐந்து ஆண்டு சிறைவாசத்தில் பாதி சிறைவாசம் அனுபவித்துள்ளார். எனவே, அவரது உடல்நலனைக் கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்க வேண்டும்" என கோரினார்.

லாலுவின் வழக்குரைஞர் முன்வைத்த வாதங்களைக் கேட்டறிந்த நீதிமன்றம், அரசு தரப்பில் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.