ETV Bharat / bharat

பாடத்திட்டத்தைக் குறைக்கும் கல்வி நிறுவனங்கள்!

டெல்லி: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) பாடத்திட்டங்களைக் குறைப்பது குறித்தும்,  வரவிருக்கும் ஜேஇஇ நுழைவுத் தேர்வு வடிவத்தை மாற்றுவது குறித்தும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கூட்டு சேர்க்கை வாரியத்தின் (ஜேஏபி) மறுஆய்வுக் கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படவுள்ளது.

பாடத்திட்டத்தை குறைக்கும் கல்வி நிறுவனங்கள்!

author img

By

Published : Jul 11, 2020, 8:02 PM IST

கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை சிபிஎஸ்இ 30 விழுக்காடு குறைத்துள்ளது. இம்முடிவு, மருத்துவம், பொறியியல் மாணவர்களுக்கான நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகளில் ஒரு மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது. இந்த நுழைவுத்தேர்வுகள் சிபிஎஸ்இ கீழ் இயங்கும் 11,12ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020-21 கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ அறிவித்தது. அதில் இயக்கம், ஒளியியல், தகவல் தொடர்பு அமைப்பு, இயற்பியலில் மின்னணு சாதனங்கள், 3-டி வடிவியல், கணிதத்தில் இருவகையான தேற்றம் போன்ற முக்கியத் தலைப்புகளும், சுற்றுச்சூழல் வேதியியல், பாலிமர்கள், மனித உடலியல் மற்றும் இனப்பெருக்கம், தனிமங்களைத் தனிமைப்படுத்தும் பொதுவான கொள்கைகள் மற்றும் செயல்முறைகள் ஆகிய முக்கிய அம்சங்களும் நீக்கப்பட்டுள்ளன.

இதேபோல், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) பாடத்திட்டங்களைக் குறைப்பது குறித்தும், வரவிருக்கும் ஜேஇஇ நுழைவுத் தேர்வு வடிவத்தை மாற்றுவது குறித்தும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கூட்டு சேர்க்கை வாரியத்தின் (ஜேஏபி) மறுஆய்வுக் கூட்டத்தில், பரிசீலனை செய்யப்படவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.