லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்திற்கும் சீன ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் இமாச்சலப் பிரதேச கரோடா கிராமத்தைச் சேர்ந்த அங்குஷ் தாக்கூர் (21) எனும் இளம் ராணுவ வீரர் உயிரிழந்தார். இவரது தாத்தாவும் தந்தையும் ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் ஆவர்.
இவரின் மரணச் செய்தி ராணுவத் தலைமையகத்தால் தொலைபேசி மூலம் கரோடா கிராம பஞ்சாயத்துக்கு கூறப்பட்டது. அதைக் கேட்டவுடன் கிராம மக்கள் சீனாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். பின்னர் தாக்கூரின் வீட்டிற்குச் சென்ற மக்கள் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். தாக்கூரின் உடல் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அம்மாநில அரசு உறுதியளித்துள்ளது.