ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டம் டச்சன் பகுதியில் பிரிவினைவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. நேற்று முன்தினம் காவல்துறையினர் மீது பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
அப்போது, காவல்துறையினரை பிரிவினைவாதிகள், கோடரிகளால் தாக்கியதாகவும் பின்னர் அவர்கள் வசமிருந்த அரசின் துப்பாக்கிகளைக் கையகப்படுத்தியதாகவும் தெரியவருகிறது. இதில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் தீவிர காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து உள்ளூர் காவல்துறையினரும் இந்திய இராணுவமும் பிரிவினைவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கினர்.
தற்போது, டச்சன் பகுதியில் சிக்கி இருக்கும் பிரிவினைவாதிகளுக்கும் அதைச் சுற்றியுள்ள பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடந்து வருவதாக கடைசிகட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக, சோபியன் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர், பிரிவினைவாதிகளிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பிரிவினைவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : ஐடி நிறுவனங்களுக்கு நான்கு மாத வாடகையில் விலக்கு!