ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் இளைஞர் சுட்டுக்கொலை - National news

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மத்திய ஆயுத காவல் படை வீரர், துப்பாக்கியால் சுட்டதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

one person killed  man killed in firing  man flees checkpost killed  ஜம்மு காஷ்மீர்  இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு  சிஆர்பிஎஃப்

author img

By

Published : May 13, 2020, 8:31 PM IST

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புட்காம் மாவட்டத்திலுள்ள மாகம் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மத்திய ஆயுத காவல் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கார் ஒன்று தடுப்புகளைத்தாண்டி செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய ஆயுத காவல் படை வீரர் சுட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக காவல் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'சம்பந்தப்பட்ட இளைஞர் அப்பகுதியிலிருந்து ஓட முயன்றார். இதனால் சிஆர்பிஎஃப் வீரர்கள் சுட்டனர். இதில் வாகன ஓட்டுநர் காயமுற்றார்.

இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அந்த இளைஞர் உயிரிழந்தார்' எனக் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.