ETV Bharat / bharat

ஜாலியன் வாலாபாக் படுகொலை: அதிகார அத்துமீறலின் 100 ஆண்டு நினைவு நாள்! - britain

அமிர்தரஸ்: இந்திய வரலாற்றின் ஆறாத வடுவான ஜாலியன் வாலாபாக்கின் 100ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஜலியான்வாலா பாக் படுகொலை: அதிகார அத்துமீறலின் 100 ஆண்டு நினைவு தினம்!
author img

By

Published : Apr 13, 2019, 8:56 AM IST

Updated : Apr 13, 2019, 10:34 AM IST

அப்போதைய பஞ்சாப் மாகாணத்தில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயில் உள்ள அமிர்தரஸிற்கு அருகேதான் இந்த கோரச் சம்பவம் அரங்கேறியது.

1919ஆம் ஆண்டு சர்தார் ஹிமத்சிங் என்பவரது தோட்டமான ஜாலியன் வாலாபாக்கில் பைசாகி பண்டிகை நாளான ஏப்ரல் 13-ல் இந்திய விடுதலைக்காக பெரும் திரளாக மக்கள் கூடினர்.

இதனையறிந்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் டயர் தலைமையில் துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையிட்டனர். அதன்படி, அங்குக் கூடியிருந்த மக்கள் மீது கொடூர துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஒருவழி மட்டுமே இருந்த அந்த இடத்தின் வாயில் பகுதியிலிருந்து தாக்குதல் நிகழ்த்தப்பட்டதால், தப்பிக்க வழிதேடி ஓடிய மக்கள் பலர் அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தும் உயிரிழந்தனர்.

பத்து நிமிடங்கள் நீடித்த இந்த கொடூர துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 1650 தடவைகள் அல்லது ஒரு சிப்பாய்க்கு 33 குண்டுகள் என்ற முறையில் சுடப்பட்டன. இதில் பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினர். ஆங்கிலேய அரசின் கணக்குப்படி வெறும் 379 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், காந்தியால் அமைக்கப்பட்ட இந்தியக் குழுவின் கணக்குப்படி சுமார் ஆயிரம் பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர் என்பது தெரியவந்தது. மேலும் இதில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் பின் லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மட்டுமின்றி இந்திய வரலாற்றிலும் இன்றளவும் ஆராத வடுவாக உள்ளது. ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100ஆவது நினைவு தினம் இன்று இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இந்தக் கொடூர சம்பவத்திற்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மே கடந்த 10ஆம் தேதி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார்.

Last Updated : Apr 13, 2019, 10:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.