டெல்லி: 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், செய்தியாளர் சந்திப்பில் தன்னை குறித்து அவதூறாகப் பேசியதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலின் மகன் விவேக் தோவால் டெல்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார். அதேபோல் அவதூறான செய்தியினை வெளியிட்டதாக, கேரவன் என்னும் இதழில் மீதும் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.
இந்நிலையில், தேர்தலின்போது நிலவிய பரபரப்பான சூழலில்தான் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக, விவேக் தோவாலிடம் ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்புக் கூறியுள்ளார். இதையடுத்து, அவர் மீதான அவதூறு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
இது தொடர்பாக பேசிய விவேக் தோவால், "ஜெய்ராம் ரமேஷின் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் கேரவன் இதழ் மீதான அவதூறு வழக்குத் தொடரும்" என்றார்.
இதையும் படிங்க: இந்தியா-வியட்நாம் பிரதமர்களிடையே டிச. 21இல் பேச்சுவார்த்தை