ETV Bharat / bharat

ஜெய்பூர் இளைஞருக்கு கரோனா வைரஸ் பாதிப்பா? - corona virus suspect admitted in SMS hospital

ஜெய்பூர்: எஸ்.எம்.எஸ். மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

jaipur
jaipur
author img

By

Published : Jan 30, 2020, 11:36 AM IST

Updated : Mar 17, 2020, 5:18 PM IST

சீனாவில் கரோனா வைரஸ் என்னும் தொற்றுநோய் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்தியாவிலும் இந்த நோய் பரவுவதைத் தடுக்க மத்திய சுகாதாரத் துறை பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. விமான நிலையங்களிலும் கரோனா வைரஸ் தொற்று குறித்து, பயணிகளைத் தீவிர பரிசோதனை செய்துவருகின்றனர்.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் ரத்த மாதிரிகளை மருத்துவமனை நிர்வாகம் புனேவின் வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளது.

Jaipur
ஜெய்பூர் எஸ்.எம்.எஸ். மருத்துவமனை

நோயாளியை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அறையில் வைத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் பரிசோதிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதேபோன்று, சீனாவில் மருத்துவப் பட்டம் படித்துவிட்டு, முதுகலைப் படிப்புக்காக ஜெய்பூர் வந்திருந்த வேறொரு நபர் ஒருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று என்று சந்தேகிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது ஆய்வில் கரோனா தொற்று இல்லை என உறுதியானது.

இதையும் படிங்க: கரோனா வைரஸ் : இந்தியர்களை வெளியேற்ற சீனாவுக்கு வெளியுறவுத் துறை கோரிக்கை

Last Updated : Mar 17, 2020, 5:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.