ETV Bharat / bharat

அரசு சார்பில் விபத்து காப்பீடு, 'ஒய்எஸ்ஆர் பீமா' திட்டம்- அசத்தும் ஆந்திர முதலமைச்சர் - ஆந்திர முதலமைச்சர்

அமராவதி: அமைப்புசாரா துறை தொழிலாளர்கள் 1.14 கோடி பேருக்கு பயனளிக்கும் 'ஒய்எஸ்ஆர் பீமா' திட்டத்தை  ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தொடங்கிவைத்தார்.

அரசு சார்பில் விபத்து காப்பீடு,  'ஒய்எஸ்ஆர் பீமா' திட்டம்- அசத்தும் ஆந்திர முதலமைச்சர்

author img

By

Published : Oct 22, 2020, 10:32 AM IST

மாநிலத்தில் உள்ள ஏழை மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பயனாளிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் திடீர் மரணம், நிரந்தர இயலாமை ஆகியவற்றிற்கு காப்பீட்டுத் தொகையைப் பெற இயலும்.

இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ .10,000 நிதி உதவியையும் அறிவித்துள்ளார். இந்த தொகையைப்பெற சமந்தப்பட்ட கிராமச் செயலகத்தை அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளார். காப்பீட்டுத் திட்டத்திற்கு ஒரு மாநில அரசு நிதியளிப்பது நாட்டில் இதுவே முதல் முறையாகும்.

இந்த இழப்பீடு காப்பீட்டுத் திட்டத்தின் பிரீமியம் மற்றும் பிற செலவுகளின் மதிப்பீடு 510 கோடி என முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சில நாள்களில் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தத் தொகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்மந்தப்பட்ட நபருக்கு 15 நாள்களுக்குள் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் தொகை டெபாசிட் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு முதலமைச்சர், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.