முன்னாள் ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று விசாகப்பட்டினத்தில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு, தெலுங்கு தேச கட்சி மற்றும் ஆதரவாளர்கள் மீது சம்பந்தம் இல்லாத சட்டவிரோத வழக்குகளைப் போடுவதாகவும், இதில் காவல் துறையினரும் ஆளும் கட்சியுடன் சேர்ந்துகொண்டு பல இடையூறுகளை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.
மேலும், நான் நல்லவனுக்கு நல்லவன் என்று கூறிய சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி சைகோ போல் நடிக்கிறார் எனவும் கடுமையாகச் சாடியுள்ளார்.