ETV Bharat / bharat

மத்திய அரசின் தவறான கொள்கைகளே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் - பைலட் தாக்கு! - இந்திய சீன எல்லை பிரச்னை

ஜெய்ப்பூர்: நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணமென ராகுல் காந்தி கூறியிருப்பது 100% நியாயமானது என ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.

மத்திய அரசின் தவறான கொள்கைகளே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் - பைலட் தாக்கு!

author img

By

Published : Sep 11, 2020, 6:18 PM IST

இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதலமைச்சரும், காங்கிரஸ் இளந்தலைவருமான சச்சின் பைலட் ஊடகங்களிடையே பேசியபோது, "இந்தியா-சீனா எல்லையில் சீன ஆக்கிரமிப்பு, வேலை இழப்பு, வேலையின்மை, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தில் வீழ்ச்சி போன்ற பிரச்னைகளை ராகுல் காந்தி எழுப்புகிறார். மக்களின் குரலாக அவர் ஒலிக்கிறார்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மத்திய அரசு முன்னெடுத்த அனைத்தும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மேலும் துணை நின்றதே ஒழிய, மக்களைப் பாதுகாக்கவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய பிரச்னைகள் அனைத்தும் 100% நியாயமானவை.

நாடு ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு நிற்கிறது. தொழில்சாலைகள், ஆலைகள், பெரும் நிறுவனங்கள், சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 2.10 கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

தற்போது, பணியில் உள்ள ஊழியர்களுக்கும் சம்பளம் குறைக்கப்படுகிறது. மறுபுறம், இந்தியாவின் எல்லை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைக்கும் வகையில் சீனா எல்லைக்குள் நுழைகிறது.

அந்த பிரச்னையை தீர்ப்பதில் கூட நேர்மையான, வெளிப்படையான ஆர்ப்பணிப்புடன் மத்திய அரசு செயலாற்றவில்லை. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பதட்டத்திலிருந்து மக்களின் கவனத்தை திசைத் திருப்ப மற்ற பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பேசுவதாக மத்திய அரசு குற்றம் கூறுகிறது.

சீன ஊடுருவல்கள் குறித்து உறுதியான நிலைப்பாட்டை எடுக்காததற்காக மத்திய அரசை மக்கள் கேள்வி கேட்கின்றனர். சீன ஊடுருவல்கள் குறித்து மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சி நமது இந்திய இராணுவத்துடன் நிற்கிறோம். எல்லை பதட்டங்களைத் தீர்க்க அரசு எந்த முடிவை எடுத்தாலும் ஆதரிப்போம்" எனக் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.